"ஸ்மார்ட்' கார்டு அச்சிட்டு வழங்குவதில்... மீண்டும் சிக்கல்! "போட்டோ' தராதவர்களால் பணி தாமதம்

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்குவதில்... மீண்டும் சிக்கல்! போட்டோ தராதவர்களால் பணி தாமதம்

திருப்பூர் : போட்டோ இல்லாத, 40 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள், "ஸ்மார்ட்' கார்டாக அச்சிட்டு வழங்குவதில், மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடை பட்டியலை சரிபார்த்து, போட்டோவை ஒப்படைக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 7.40 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ஆதார் எண் இணைக்கப்பட்ட பின், போலி என்று கருதப்பட்ட, 60 ஆயிரம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. ஆதார் விவரம் இணைத்துள்ள கார்டுகள் மட்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 6.70 லட்சத்துக்கும் அதிகமான கார்டுகள் உள்ளன. அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்த குடும்பங்களுக்கு மட்டும், "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் இதுவரை, 3.52 லட்சம் கார்டுதாரர்களுக்கு, "ஸ்மார்ட்' கார்டு வழங்கப்பட்டுள்ளது. முதலில், ரேஷன் கார்டு விவரங்களை, ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்ததால், "ஸ்மார்ட்' கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்காலிக பணியாளரை அமர்த்தி, ரேஷன் கார்டு விவரங்கள், தமிழில் மொழிபெயர்த்து, பதிவு செய்யப்பட்டது.அதன்பின், குடும்ப தலைவரின் போட்டோ தெளிவாக இல்லாததால், இப்பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. புதிய போட்டோ வழங்க வேண்டும் என்று, அறிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில், 1.50 லட்சம் கார்டுதாரர்களின் போட்டோக்கள் பெற்று, அனுப்பி வைக்கப்பட்டன. அச்சாகும் "ஸ்மார்ட்' கார்டுகள், ரேஷன் கடை வாரியாக வினியோகம் செய்யப்படுகிறது.இதுவரை, 3.52 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம், 73 ஆயிரத்து, 568 கார்டுகள் வரப்பெற்றுள்ளன. திருப்பூர் வடக்கில், 22,988 கார்டுகள்; திருப்பூர் தெற்கில், 13,139; அவிநாசிக்கு, 9,807; உ

மூலக்கதை