‘19 சதவீத மக்கள் இன்னும் வங்கி சேவை பெறவில்லை’

தினமலர்  தினமலர்
‘19 சதவீத மக்கள் இன்னும் வங்கி சேவை பெறவில்லை’

புதுடில்லி : ‘இந்­தி­யா­வில், வங்கி சார்ந்த சேவை­களை, இது­வரை, 19 சத­வீ­தத்­திற்­கும் மேற்­பட்­டோர் பெற­வில்லை’ என, அசோ­செம் அமைப்பு மற்­றும் யர்­னஸ்ட் அண்டு யங்க் நிறு­வ­னம் இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: அனைத்து மக்­களும் நிதி செயல்­பா­டு­களில் ஈடு­பட, அவர்­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக, மத்­திய அரசு மற்­றும் ரிசர்வ் வங்கி பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றன. இதன்­படி, கூட்­டு­றவு வங்­கி­கள், பிராந்­திய நகர்ப்­புற வங்­கி­கள், முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் கடன்­களை வழங்க இலக்கு நிர்­ண­யித்­தல் ஆகி­ய­வற்­றின் மூலம், பொது­மக்­க­ளுக்கு நிதி சேவை­களை வழங்கி வரு­கின்றன.

மேலும், சுய­உ­த­விக் குழுக்­கள் அமைப்­போ­ருக்கு கடன் வழங்­கு­தல், வர்த்­தக ஆலோ­ச­கர்­களை நிய­மித்­தல், வீடு தேடி சென்று கடன் அளிக்­கும் திட்­டம் போன்­ற­வற்­றை­யும் வங்­கி­கள் செயல்­ப­டுத்தி வரு­கின்றன. இத்­த­கைய பல அம்­சங்­கள் இருந்­தும், இது­வரை, 19 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மா­னோர், வங்கி சார்ந்த சேவை­களை பெற­வில்லை. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை