3 ஆண்டுகளுக்குப்பின் பாதுகாப்புடன் துவக்கம்:இரண்டாவது ரயில்பாதை பணிகள்

தினமலர்  தினமலர்

வடமதுரை:வடமதுரை அருகே இழப்பீடு பிரச்னையால் பணி நிறுத்தப்பட்ட செங்குளத்துபட்டி பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 2வது ரயில் பாதை பணி துவங்கியது.விழுப்புரம்- - திண்டுக்கல் இடையே 2வது ரயில் பாதை பணி கடந்த 2011ல் துவங்கியது. விழுப்புரம் துவங்கி கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து இருவழிப்பாதை பயன்பாட்டில் உள்ளது. கல்பட்டிசத்திரம்- தாமரைப்பாடி இடையே 2வது பாதைக்காக கையகப்படுத்திய நிலங்கள், அவற்றில் இருந்த மரங்கள், பயிர்கள், கட்டடங்களுக்கு இழப்பீடு வழங்க மதிப்பீடு பணி முடிந்து 4 ஆண்டுகளாகியும் பணம் யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது.
3 ஆண்டு தடை இதனால் அய்யலுார், பெருமாள்கோயில்பட்டி, செங்குளத்துப்பட்டி பகுதிகளில் 2வது ரயில் பாதை பணியை விவசாயிகள் அனுமதிக்காததால் கடந்த 2014 முதல் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தடை பட்டது. தற்போது மற்ற பகுதிகளில் பணி நிறைவடைந்து ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், எஞ்சியுள்ள கல்பட்டிசத்திரம்- - தாமரைப்பாடி (27 கி.மீ.,) இடையேயான பணியை முடிக்க ஆர்.வி.என்.எல்., நிர்வாகம் ஆர்வம் காட்டியது.தொழில் சட்டம்: இதனையடுத்து மாநில அரசு நிர்வாகத்தின் சார்பில் ரயில்வேக்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்ய '1997ல் ஆண்டு தொழிலியல் துறை நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள் ளது. இதனால் செப்டம்பர் மாதத்திற்குள் நில கையகப்படுத்தும் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். போலீஸ் பாதுகாப்பு3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வடமதுரை - செங்குளத்துப்பட்டி பகுதியில் கடந்த வாரத்தில் பணி செய்ய முயன்ற தொழிலாளர்களை விவசாயிகள் தடுத்தனர். இதனையடுத்து தற்போது ரயில்வே போலீஸ் பாதுகாப்புடன் பணி தடையின்றி நடக்கிறது. பணியை தடுக்க வந்த விவசாயிகளுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.

மூலக்கதை