பலதார மணம் புரிந்த இருவருக்கு சிறை

தினமலர்  தினமலர்
பலதார மணம் புரிந்த இருவருக்கு சிறை

மான்ட்ரீல்: கனடாவில், பலதார மணம் புரிந்த இரண்டு பேருக்கு, தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், பலதார மணம் புரிவது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் எல்லையை ஒட்டியுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைப் பகுதியில், மார்மோன் சர்ச் என்ற புதிய மதம், 60 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இந்த மதத்தில், பலதார மணம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மதத்தின் தலைவர்களாக உள்ள, வின்ஸ்டன் பிளாக்மோர், 60, மரியான் ஓலர், 53, ஆகியோர், பல பெண்களை மணந்துள்ளனர். பிளாக்மோர், 25 மனைவியர் மூலம், 146 குழந்தைகளை பெற்று
உள்ளார். ஓலர், ஐந்து பெண்களை மணந்துள்ளார்.௨௦ ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்கள் மீது, பலதார மணம் சட்டத்தின் கீழ் வழக்கு நடந்து வருகிறது. கனடாவில் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படியே, மார்மோன் சர்ச் மதத்தை பின்பற்றி வருவதாக இருவரும் வாதிட்டனர். இந்த வழக்கில், இருவரும் குற்றவாளிகள் என அறிவித்த, கனடா கோர்ட், இருவருக்கும் தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

மூலக்கதை