ஜேர்மனியில் குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜேர்மனியில் குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

ஜேர்மனிக்கு அடைக்கலம் தேடி வரும் அதிகளவிலான மக்களை தடுக்க ஏஞ்சலா மெர்க்கல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஜேர்மனியில் கூட்டாட்சி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
 
அந்நாட்டுக்கு அதிகளவில் வேறு நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது தொடர்பான விடயம் தேர்தல் பிரசாரத்தில் விவாத பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இது குறித்து சமுக ஜனநாயக கட்சியின் தலைவர் Martin Schulz அளித்துள்ள பேட்டியில், கடந்த 2015ல் 890,000 மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு அடைக்கலம் தேடி வந்தார்கள்.
 
இது போன்ற அதிகளவு மக்கள் மீண்டும் நாட்டுக்குள் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
 
மேலும், இந்த விடயத்தை தேர்தல் பிரசாரத்தில் பெரியளவில் விவாத பொருளாக மாற்ற தான் நினைப்பதாக Martin கூறியுள்ளார்.
 
கடந்த இரு ஆண்டுகளை விட ஜேர்மனிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது.
 
2017ல் இதுவரை 90,389 பேர் ஜேர்மனிக்குள் வந்துள்ளார்கள். ஜேர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் அதிகளவிலான மக்களை ஜேர்மனிக்குள் நுழைய அனுமதி கொடுத்து வருகிறார்.
 
ஏஞ்சலாவின் செயலால் மக்களின் ஆதரவு அவருக்கு குறைந்துள்ளது. அதே சமயம் இதை எதிர்க்கும் Alternative for Germany கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

மூலக்கதை