மகளிர் உலக கோப்பை பைனலில் அசத்தல்: இங்கிலாந்து வீராங்கனை சர்ப்சோலேவின் தந்தை பெருமிதம்

தினகரன்  தினகரன்

லண்டன்: கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த, ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியாைவ வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இதில், இங்கிலாந்து வீராங்கனை அன்யா சர்ப்சோலே 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்ட நாயகி விருது வென்றார். இது குறித்து அன்யா சர்ப்சோலேவின் தந்தை இயான் சர்ப்சோலே கூறுகையில், ‘’அன்யா சர்ப்சோலேவின் பந்து வீச்சை பார்த்தபிறகு நீண்ட நேரம் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தேன். உற்சாக மிகுதியில் மேலும், கீழுமாக துள்ளி குதித்தேன். எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பெருமையான தருணம் இது. லார்ட்ஸ் மைதானத்தில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தி, இங்கிலாந்துக்கு போட்டியை வென்று தருவார் என ஒரு போதும் கற்பனை செய்ததில்லை. அன்யா சர்ப்சோலே எப்போதும் உறுதியாகவும், ஒரே மன நிலையிலும் இருக்க கூடியவர். தனக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெளிவாக தெரியும்’’என்றார்.

மூலக்கதை