முதுகில் குத்தும் நாடு; பாக்., மீது அமெரிக்க எம்.பி., பாய்ச்சல்

தினமலர்  தினமலர்
முதுகில் குத்தும் நாடு; பாக்., மீது அமெரிக்க எம்.பி., பாய்ச்சல்

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானை, முதுகில் குத்தும் நாடு என அமெரிக்க எம்.பி., டென் போயி கூறியுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸூக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டப்படி, முதுகில் குத்தும் நாடு பாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில், ஹக்கானி பயங்கரவாத அமைப்பு மீது நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பாகிஸ்தான் குறித்த நமது தவறான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை