பூமிக்கடியில் 94 மீட்டர் ஆழத்தில் வியக்க வைக்கும் மெட்ரோ ரயில் நிலைய திட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பூமிக்கடியில் 94 மீட்டர் ஆழத்தில் வியக்க வைக்கும் மெட்ரோ ரயில் நிலைய திட்டம்!

பூமிக்கு அடியில் 94 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
 
தென்மேற்கு சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் உள்ள மெட்ரோ சுரங்க ரயில் நிலையசுமார் 94 மீட்டர் ஆழத்தில் அமைய உள்ளது.  சாலையில் இருந்து பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் செல்ல 32 நகரும் படிக்கட்டு (எக்ஸ்லேட்டர்) அமைக்கப்படுகிறது. அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு 3 நிமிடத்தில் செல்ல முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் உடையது என்ற பெருமையை சீனா பெறுகிறது. இந்த ரயில் நிலையம் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் திறக்கப்படும் என சுரங்கப்பாதை மெட்ரோ நிலையம் தெரிவித்துள்ளது.
 
தற்போது வடகொரியாவில் 110 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதுவே பூமிக்கு அடியில் உள்ள மிக ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெருமையை தக்கவைத்து வருகின்றது. சீனாவில் அமைய உள்ள ரயில் நிலையம் அதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்க இருக்கிறது. 

மூலக்கதை