அரசு துறையில் தனியார் வல்லுனர்கள்; ‘நிடி ஆயோக்’ பரிந்துரை ஏற்பு

தினமலர்  தினமலர்
அரசு துறையில் தனியார் வல்லுனர்கள்; ‘நிடி ஆயோக்’ பரிந்துரை ஏற்பு

புது­டில்லி : ‘அரசு துறை­களில், பணி மூப்பு அடிப்­ப­டை­யில், உயர் பத­வி­க­ளுக்கு அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வெளி­யில் இருந்­தும் தகுதி வாய்ந்த வல்­லு­னர்­களை பணி அமர்த்­த­லாம்’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து உள்­ளது.

‘ஒரு துறை­யில் முழு­மை­யான ஆற்­றல், அனு­ப­வம் உள்­ள­வரை, அத்­துறை சார்ந்த அரசு பத­வி­யில் அமர்த்­தும் போது, குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை அத்­துறை பெறும்’ என, நிடி ஆயோக் தெரி­வித்து உள்­ளது. அதன்­படி, மத்­திய அரசு, வெளி­யில் இருந்து, 50 வல்­லு­னர்­களை, அரசு துறை­களில் பணி­ய­மர்த்த திட்­ட­மிட்டு உள்­ளது. முதற்­கட்­ட­மாக, மத்­திய ஆயுஷ் அமைச்­ச­கத்­தின் சிறப்பு செய­ல­ராக, ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, ராஜேஷ் கோடேச்சா நிய­மிக்­கப்­பட்டு உள்­ளார். ஆயுர்­வே­தத்­தில் முனை­வர் பட்­டம் பெற்ற இவர், குஜ­ராத் ஆயுர்­வேத பல்­க­லை­யின் துணை­வேந்­த­ராக பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

‘இவரை தொடர்ந்து, பல்­வேறு துறை­களில், அந்­தந்த துறை­களில் முழு­மை­யான நிபு­ணத்­து­வ­மும், அனு­ப­வ­மும் உள்­ளோர் நிய­மிக்­கப்­ப­டு­வர். ‘அனைத்து துறை­க­ளை­யும் முன்­னேற்ற வேண்­டும் என்ற நோக்­கத்­தில், இத்­திட்­டத்தை அரசு செயல்­ப­டுத்­தி­னா­லும், அரசு ஊழி­யர்­க­ளுக்கு உள்ள உரி­மை­கள் பறி­போ­கா­மல் பாது­காக்க, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

மூலக்கதை