ஊழியர்களை விட 1,200 மடங்கு ஊதியம் பெறும் தனியார் நிறுவன தலைவர்கள்

தினமலர்  தினமலர்
ஊழியர்களை விட 1,200 மடங்கு ஊதியம் பெறும் தனியார் நிறுவன தலைவர்கள்

புது­டில்லி : தனி­யார் நிறு­வன தலை­வர்­கள், தலைமை செயல் அதி­கா­ரி­கள் ஆகி­யோர், நடுத்­தர ஊழி­யர்­களின் ஊதி­யத்தை விட, 1,200 மடங்கு அதிக ஊதி­யம் பெறு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீட்­டில் உள்ள, 15 நிறு­வ­னங்­கள், 2016 – 17ம் நிதி­யாண்­டின் ஊதிய விப­ரங்­களை, ‘செபி’யிடம் அளித்­துள்ளன. அதில், தலைமை பொறுப்­பில் இருப்­ப­வ­ருக்­கும், நடுத்­தர பத­வி­யில் உள்ள பணி­யா­ள­ருக்­கும் இடை­யி­லான ஊதிய வேறு­பாடு, மலைக்­கும், மடு­வுக்­கும் உள்­ளதை போன்று உள்­ளது.

லுாபின் லேப­ரேட்­ட­ரிஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர், நடுத்­தர பணி­யில் உள்­ள­வரை விட, 1,263 மடங்கு அதிக ஊதி­யம் பெற்­றுள்­ளார். இது, 2015 – 16ம் நிதி­யாண்­டில், 1,317 மடங்­காக இருந்­தது. இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, 217 மடங்கு அதிக ஊதி­யம் பெற்­றுள்­ளார். எல் அண்டு டி நிறு­வன உய­ர­தி­காரி, 2015 – 16ம் நிதி­யாண்­டில், 1,004 மடங்கு கூடு­தல் ஊதி­யம் பெற்­றுள்­ளார்.

டி.சி.எஸ்., நிறு­வன தலைமை செயல் அதி­கா­ரி­யின் ஊதி­யம், 515 மடங்கு அதி­க­மாக உள்­ளது. பஜாஜ் ஆட்டோ தலை­வர், 522 மடங்கு அதிக ஊதி­யம் பெற்­றுள்­ளார். ஐ.டி.சி., நிறு­வன தலை­வர், ஒய்.சி., தேவேஷ்­வ­ரின் ஊதி­யம், 427ல் இருந்து, 508 மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இவர், படி­கள் உட்­பட, 21.16 கோடி ரூபாய் பெற்­றுள்­ளார். அது போல, சிப்லா, 416 மடங்கு, பார்தி ஏர்­டெல், 366, மகிந்­திரா அண்டு மகிந்­திரா, 108, இந்­துஸ்­தான் லீவர், 138, டாடா ஸ்டீல், 94 மடங்கு என்ற அள­விற்கு வித்­தி­யா­சம் உள்­ளது.
ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் தலை­வர் முகேஷ் அம்­பானி, பல ஆண்­டு­க­ளாக, 15 கோடி ரூபாய் ஊதி­யம் பெற்று வரு­கி­றார். எனி­னும், 2014 – 15ம் நிதி­யாண்­டில், இவ­ரின் ஊதி­யம், நடுத்­தர பத­வி­யில் உள்­ள­வரை விட, 205 மடங்கு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை