தங்கம் விலை சிறிதளவு உயர்வு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சிறிதளவு உயர்வு

சென்னை : தங்கம் விலையில் இன்று(ஜூலை 24-ம் தேதி) பெரிய மாற்றம் இல்லை, சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,728-க்கும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.21,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,180-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.41.00-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.38,280-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை