சூர்யாவுக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்

PARIS TAMIL  PARIS TAMIL
சூர்யாவுக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தில் நாயகியாக நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங். இதற்கு முன்பு தமிழில் நடித்த சில படங்கள் தன்னை ஏமாற்றிய நிலையில், இந்த படம் கண்டிப்பாக தமிழில் தனக்கு நல்லதொரு ஓப்பனிங்கை கொடுக்கும் என்ற எதிர்பார்க்கிறார் ரகுல் பிரீத் சிங். இதற்கிடையே இந்த படத்தில் நடித்து வரும்போதே கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார் அவர்.

 
மேலும், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து வரும்போதே அவரது அண்ணன் சூர்யா நடிக்கும் படத்திற்கும் தற்போது கமிட்டாகியிருக்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை படத்தை அடுத்து மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வரும் செல்வராகவன், அந்த படத்தை முடித்ததும் சூர்யாவின் 36வது படத்தை இயக்குகிறாராம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகயிருக்கிறது.
 

மூலக்கதை