சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது?

தினமலர்  தினமலர்
சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது?

சந்தை உச்­சத்­தில் நிற்­கிறது. தொடர்ந்து, ‘நிப்டி’ 10 ஆயி­ரம் புள்­ளி­களை தொடுமா என்ற ஆர்­வத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர்.
வரி­சை­யாக வெளி­வ­ரும் நிறு­வ­னங்­களின் காலாண்டு நிதி அறிக்­கை­களை, சந்தை, கூர்ந்து எடை போடு­கிறது. சந்­தை­யில் அதி­கம் வீற்­றி­ருக்­கும் சிறு முத­லீட்­டா­ளர்­கள், அடுத்து எந்த பங்­கு­களை வாங்­க­லாம் என்ற ஆர்­வத்­தில், தின­மும் சந்­தையை நோக்கி படை­யெ­டுக்­கின்­ற­னர்.நிதி ஆலோ­ச­கர்­கள் மற்­றும் நிதி மேலா­ளர்­கள், இது­வரை அடைந்த அப­ரி­மி­த­மான லாபங்­கள் நிலைக்­குமா என, சந்­தே­கத்­தில் வாழ்­கின்­ற­னர். இருந்­தும், வேறு வழி­யின்றி, தொடர்ந்து பங்­கு­களை வாங்­கிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால், தின வர்த்­த­கர்­களோ, இது எது­வும் தங்­களை பாதிக்­கா­தது போல, சந்­தையை மொய்க்­கின்­ற­னர்.இந்த சந்­தைச் சூழல், பொது­வாக, காளை சந்­தைக்கு மிகப் பொருத்­த­மாக இருக்­கும். அத்­த­கைய சூழ­லில், பொரு­ளா­தா­ரம் வளர்ச்­சி­யின் உச்­சத்தை சார்ந்து இருக்­கும். சந்தை தொடர்ந்து, புதிய உச்­சங்­களை ஏற்­ப­டுத்­திய வண்­ணம் நக­ரும்.தற்­போ­தைய பொரு­ளா­தார சூழல் ஒன்­றும், அப்­படி உச்­சத்­தில் இல்லை என்­பதை, நாம் அனை­வ­ரும் ஒப்­புக் கொள்­வோம்.• இந்த சூழ­லில், சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது?• பொரு­ளா­தா­ரத்­தின் எதிர்­கா­லம் பற்­றிய, சந்­தை­யின் உற்­சா­கம் நிலைக்­குமா? • நிதி சிக்­க­லில் இருக்­கும் பெரு நிறு­வ­னங்­கள், தங்­கள் அடிப்­படை நிதி நிலையை, எவ்­வ­ளவு விரை­வில் மாற்றி அமைத்­துக் கொள்ள இய­லும்?• வங்­கி­களின் பொரு­ளா­தார சிக்­கல்­கள் தீருமா அல்­லது கடன் பெற்ற நிறு­வ­னங்­களின் நிர்­வா­கம், தங்­கள் நிறு­வ­னங்­களின் மேலாண்மை கட்­டுப்­பாட்டை இழக்­கும் சூழல் ஏற்­ப­டுமா?• வரி சட்­டங்­களில் ஏற்­பட்ட சமீ­ப­கால மாற்­றங்­கள், அர­சின் வரு­வாயை அதி­க­ரிக்­குமா?• அர­சின் நிதி பற்­றாக்­கு­றை­கள், நிதி அறிக்­கை­யில் சொன்ன அள­வில் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டுமா?• பொரு­ளா­தார வளர்ச்சி மீண்­டும் வேகம் பிடிக்­குமா?இப்­படி, சந்­தை­யின் ஆர்­வ­லர்­கள் மன­தில் பல கேள்­வி­கள், சந்­தே­கங்­கள்...ஆனால், இவை அனைத்­தை­யும் புறந்­தள்ளி சந்தை முன்­னேற துடிக்­கிறது.சந்­தை­யின் தற்­போ­தைய மன­நிலை என்ன என்று, இப்­போது புரிந்து கொள்­வோம்.சந்தை, பொரு­ளா­தா­ரத்­தின் சிக்­கல்­க­ளை­யும், சவால்­க­ளை­யும் நன்கு புரிந்து வைத்­துள்­ளது. சந்தை, தன் எதிர்­பார்ப்­பு­களை எந்­த­ளவு வளர்த்­துக் கொள்­ள­லாம் என, ஆழ்ந்த புரி­த­லு­ட­னேயே இயங்­கு­கிறது. அதிக நம்­பிக்கை வைத்­துள்ள நிறு­வ­னங்­கள், தங்­கள் காலாண்டு கணக்­கில் எதிர்­பார்ப்­பு­களை மீறி­னால், சந்தை அதை பெரி­தும் வர­வேற்­கிறது. அதே சம­யம், எதிர்­பார்ப்­பு­கள் எட்­டப்­ப­டா­விட்­டால், அந்த பங்­கின் மதிப்பு குறை­கிறது.இந்த காலாண்­டில், பல முக்­கிய நிறு­வ­னங்­கள் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றவோ, மிஞ்­சவோ கூடும். இதை, சந்தை நன்கு உணர்ந்து இருக்­கிறது. அத­னால் தான், சந்­தை­யில் சிறப்­பாக இயங்­கும் நிறு­வ­னங்­களின் மதிப்பு, சற்று உயர்ந்தே நிலைக்­கிறது. சந்­தை­யின் எதிர்­பார்ப்பு அதி­கம் இல்­லாத பங்­கு­கள், சற்று மந்­த­மா­கவே உள்ளன. எதிர்­பார்ப்­பு­கள் குறை­வாக இருக்­கும் போது, அதை நிறு­வ­னங்­கள் மிஞ்­சு­வது சாத்­தி­ய­மா­கிறது.ஆக, சந்தை எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி, நிறைவு செய்­யும் விதமே, அதன் வளர்ச்­சிக்கு வித்­தி­டும் சூழ­லாக அமை­கிறது. மென்­பொ­ருள் மற்­றும் மருந்து உற்­பத்­தித் துறை­களின் பங்­கு­கள், குறைந்த எதிர்­பார்ப்­பு­களை எளி­தில் மிஞ்­சும் சூழல் ஏற்­பட்­டால், அதுவே சந்தை மேலும் உயர வித்­தி­டும். வரும் வாரங்­களில், காலாண்டு முடி­வு­கள் சந்­தை­யின் திசையை நிர்­ண­யிக்­கும் வண்­ணம் அமை­வது உறுதி.

மூலக்கதை