தன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதிபதி இளஞ்செழியன்

PARIS TAMIL  PARIS TAMIL
தன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதிபதி இளஞ்செழியன்

தன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
 
தனது வாகனத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து கருத்துத் வெளியிட்டவர்,
 
“மேல் நீதிமன்றத்தில் காணப்படும் பாராதூரமான வழங்குகளை நான் நெறிப்படுத்தி வருவதினால் இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் என் மீதே நிகழ்த்தப்பட்டது என நம்பகிறேன்.
 
எனது பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. என்னைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாகவே நான் கருதுகின்றேன். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை எனது வாகனத்தில் ஏற்றி நானே யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றேன்.
 
போகும் வழியில் யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு தொடர்பு கொண்டு சம்பவத்தினைத் தெரியப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கும் படியும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவு இட்டிருந்தேன்.
 
மேலும் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களை விசாரணையின் போது பயன்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளேன்.
 
என் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நீதியமைச்சு, நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 

மூலக்கதை