மொபைல் போன் தயாரிப்பு ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியது

தினமலர்  தினமலர்
மொபைல் போன் தயாரிப்பு ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியது

புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்­சர் மனோஜ் சின்ஹா, ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது:உள்­நாட்­டில், மொபைல் போன் தயா­ரிப்பு வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. 2016 –- 17ம் நிதி­யாண்­டில், 90 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, மொபைல் போன்­கள் தயா­ரிக்­கப்­பட்டு உள்ளன.இது, 2015 – -16 மற்­றும் 2014 – -15ம் நிதி­யாண்­டு­களில், முறையே, 54 ஆயி­ரம் கோடி ரூபாய் மற்­றும் 18,900 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், மொபைல் போன் இறக்­கு­மதி, 21 கோடி­யில் இருந்து, 14.6 கோடி­யாக குறைந்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்­டில் மேலும் குறைந்து, 7.60 கோடி­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. இதன் மதிப்பு, 24,363 கோடி ரூபாய். உள்­நாடு மற்­றும் வெளி­நாட்­டைச் சேர்ந்த, முன்­னணி மொபைல் போன் நிறு­வ­னங்­கள், அவற்­றின் தொழிற்­சா­லை­களை, இந்­தி­யா­வில் பல்­வேறு மாநி­லங்­களில் அமைத்­துள்ளன. ஒரு­சில நிறு­வ­னங்­கள், மொபைல் போன் உதிரி பாகங்­களை பிற நிறு­வ­னங்­கள் மூலம் தயா­ரித்து, பெற்­றுக் கொள்­கின்றன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை