காமராஜர் துறைமுகம் 10 கோடி டாலர் கடன் திரட்டியது

தினமலர்  தினமலர்
காமராஜர் துறைமுகம் 10 கோடி டாலர் கடன் திரட்டியது

சென்னை : சென்னை அருகே, எண்­ணுா­ரில் உள்ள காம­ரா­ஜர் துறை­மு­கம், அதன் விரி­வாக்­கத் திட்­டத்­திற்­காக, ஆக்­சிஸ் வங்­கி­யி­டம் இருந்து, 10 கோடி டாலர் கடன் திரட்டி உள்­ளது.இது குறித்து, காம­ரா­ஜர் துறை­மு­கத்­தின் தலை­வர், எம்.ஏ.பாஸ்­க­ராச்­சார் கூறி­ய­தா­வது:மத்­திய கப்­பல் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் நிதின் கட்­கரி, ‘துறை­மு­கங்­கள் வாயி­லான, அன்­னிய செலா­வணி வரு­வாயை அதி­க­ரிக்க, குறைந்த வட்­டி­யில், அன்­னிய செலா­வணி கடன் பெற வேண்­டும்’ என, தெரி­வித்து உள்­ளார்.இதை­ய­டுத்து, கட­னுக்­கான ஒப்­பந்­தப் புள்­ளி­கள் கோரப்­பட்­டன. இதில் பங்­கேற்ற வங்­கி­களில், ஆக்­சிஸ் வங்கி, மிக­வும் குறை­வாக, 3.15 சத­வீத வட்­டி­யில், ஐந்து ஆண்­டு­களில் திரும்ப அளிக்­கும் வகை­யில், 10 கோடி டாலர் கடன் வழங்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்­தது. அதை, துறை­முக நிர்­வா­கம் ஏற்­றுக் கொண்­டது.இந்த கடன் தொகை­யில், துறை­மு­கத்­தின் ஆழம், தற்­போ­தைய, 16 மீட்­ட­ரில் இருந்து, 18 மீட்­ட­ராக அதி­க­ரிக்­கப்­படும். இதன் மூலம், மிகப்­பெ­ரிய சரக்கு கப்­பல்­களை துறை­மு­கத்­தில் நிறுத்த முடி­யும். இத­னால், சரக்கு கையா­ளும் செலவு பெரு­ம­ளவு குறை­யும். இத்­து­டன், தமி­ழக மின் வாரி­யத்­திற்­காக, புதிய நிலக்­கரி இறக்­கு­மதி தளம், பொது­வான சரக்கு தளம் மற்­றும் மூன்று லட்­சம் கார்­களை கையா­ளக்­கூ­டிய, இரண்­டா­வது வாகன ஏற்­று­மதி முனை­யம் ஆகி­ய­வை­யும் அமைக்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை