பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 3 ஆண்டுகளாக பின்னடைவு

தினமலர்  தினமலர்
பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 3 ஆண்டுகளாக பின்னடைவு

புதுடில்லி : மத்­திய ஜவுளித் துறை இணை அமைச்­சர் அஜய் தம்தா, ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது:மூன்று ஆண்­டு­க­ளாக, நாட்­டின் பருத்தி ஜவுளி வகை­களின் ஏற்­று­மதி, 10சத­வீ­தம் சரி­வ­டைந்­துள்­ளது.கடந்த, 2016 –- 17ம் நிதி­யாண்­டில், 70 ஆயி­ரத்து, 936 கோடி ரூபாய் மதிப்­பி­லான பருத்தி ஜவு­ளி­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன. இது, 2015 – 16 மற்­றும் 2014 –- 15ம் நிதி­யாண்­டு­களில், முறையே, 72 ஆயி­ரத்து, 994 கோடி ரூபாய் மற்­றும் 71 ஆயி­ரத்து, 913 கோடி ரூபாய் ஆக இருந்­தது.இவ்­வாறு அவர் கூறி­னார்.பருத்தி ஜவு­ளி­கள் ஏற்­று­மதி பிரி­வில், பருத்தி நுாலிழை, இதர ஜவுளி இழை, துணி, படுக்கை விரிப்பு, தலை­யணை, திரைச்­சீலை, கச்சா பருத்தி கழிவு ஆகி­யவை அடங்­கி­யுள்ளன.தற்­போது, திறந்­த­வெளி உரிம திட்­டத்­தின் கீழ், பருத்தி ஜவு­ளி­கள் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்றன. ஜவு­ளி­கள் ஏற்­று­மதி, இறக்­கு­மதி நட­வ­டிக்­கை­கள், மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழிற்­துறை அமைச்­ச­கம், அன்­னிய வர்த்­தக இயக்­கு­ன­ர­கம் ஆகி­ய­வற்­றின் கீழ் நடை­பெ­று­கின்றன.

மூலக்கதை