உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு

தினமலர்  தினமலர்
உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு

மும்பை : மத்­திய அரசு, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 1,000 கோடி டாலர் முத­லீட்டை ஈர்க்க திட்­ட­மிட்டு உள்­ளது.இதை, மும்­பை­யில் நடை­பெற்ற சர்­வ­தேச உணவு மாநாட்­டில், மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் தெரி­வித்­தார்.அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, பன்­முக பிராண்டு உண­வுப் பொருட்­களின் சில்­லரை விற்­ப­னை­யில், அன்­னிய நேரடி முத­லீடு, 100 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, இத்­துறை, 40 சத­வீத வளர்ச்சி கண்­டுள்­ளது.அடுத்து, பண்­ணைப் பொருட்­கள் உற்­பத்தி முதல், விற்­பனை வரை­யி­லான அனைத்து கட்­ட­மைப்பு வச­தி­களும் செயல்­பாட்­டுக்கு வந்­தால், மிகப்­பெ­ரிய அள­வில், அன்­னிய முத­லீடு குவி­யும்.அடுத்த ஐந்து ஆண்­டு­களில், மத்­திய அரசு, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், 1,000 கோடி டாலர், அன்­னிய நேரடி முத­லீட்டை ஈர்க்க இலக்கு நிர்­ண­யித்து உள்­ளது.உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், அரசு மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்­தங்­க­ளால், விவ­சா­யி­கள், தங்­கள் விளை­பொ­ருட்­க­ளுக்கு உரிய விலையை பெற முடி­யும். மேலும், ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். நாட்­டின் அன்­னிய செலா­வணி வரு­வாய் உய­ரும்.இதற்­காக, மத்­திய அரசு, 6,000 கோடி ரூபாய் முத­லீட்­டில், ‘விவ­சா­யி­கள் பண்ணை திட்­டம்’ என்ற திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இதில், உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், தற்­போது உள்ள திட்­டங்­கள் மற்­றும் புதிய திட்­டங்­கள் ஒன்­றி­ணைக்­கப்­படும்.இத்­திட்­டத்­தில், 20 லட்­சம் விவ­சா­யி­கள் பயன் பெறு­வர். 2019 – 20ம் நிதி­யாண்­டில், நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும், 5,30,500 பேர் வேலை­வாய்ப்பு பெறு­வர் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.ஜப்­பான், ஐரோப்­பிய நாடு­கள் மற்­றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளைச் சேர்ந்த ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், இந்­திய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­பட ஆர்­வ­மாக உள்ளன. குறிப்­பாக, நெதர்­லாந்து, டென்­மார்க், இத்­தாலி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் நாடு­கள், இந்­தி­யா­வில் கூட்­டாக முத­லீடு செய்­வது குறித்து விசா­ரித்து வரு­கின்றன.இது­வரை, 42 உணவு பூங்­காக்­கள், 100 குளிர்­சா­தன கிடங்­கு­கள் அமைக்க ஒப்­பு­தல் வழங்­கப்­பட்டு உள்­ளது. இதில், 10 பெரிய உணவு பூங்­காக்­கள் மற்­றும் 30 குளிர்­சா­தன கிடங்­கு­கள் செயல்­பாட்­டிற்கு வந்­துள்ளன. எஞ்­சி­யவை, அடுத்த இரு ஆண்­டு­களில், பயன்­பாட்­டிற்கு வந்­து­வி­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஏப்., முதல், தற்­போது வரை, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யின் ஏற்­று­மதி, 100 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. மத்­திய அரசு, நவ., 3 -– 5 வரை, டில்­லி­யில், சர்­வ­தேச உணவு மாநாட்டை நடத்த உள்­ளது. இதில், உணவு பதப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட துறை­க­ளைச் சார்ந்த, சர்­வ­தேச நிறு­வ­னங்­கள் பங்கு கொள்ள உள்ளன. இந்த மாநாடு, உண­வுத் துறை­யில் உள்ள உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் இணைந்து செயல்­ப­ட­வும், அவற்­றின் வர்த்­தக வளர்ச்­சிக்­கும் உத­வும்.ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர்

மூலக்கதை