நடிகை கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனிலை கொலை செய்ய திட்டம் ேபாலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகை கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனிலை கொலை செய்ய திட்டம் ேபாலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலை, கோவையில் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை பிப்.

17ம் தேதி இரவு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த கும்பல் நடிகையை மிரட்டி ஆபாச படம் எடுத்தது.

இதுதொடர்பாக பல்சர் சுனில் தலைமையிலான 7 பேர் அடங்கிய கூலிப்படையை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்ததற்கு பின்னர் பல்சர் சுனில் கோவையில் உள்ள ஒரு கூட்டாளி வீட்டில் தலைமறைவாக இருந்தார்.

இதன்பின்னர் பிப்ரவரி 23ம் தேதி மதியம் எர்ணாகுளம் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அப்போது பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளி விஜிசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசாரின் தற்போதைய விசாரணையில் மேலும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது அதன் விவரம் வருமாறு: நடிகையை கடத்திய பின் பல்சர் சுனில் கோவையில் தங்கியிருந்தார்.

அப்போது அவரை கோவையில் வைத்து ஒரு கூலிப்படை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அவருடன் கைதான விஜிசுக்கு நெருக்கமான ஒரு கூலிப்படைதான் பல்சர் சுனிலை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து பல்சர் சுனில் கோவையில் தங்கியிருந்தபோதுதான் இந்த விவரம் விஜிசுக்கு தெரியவந்தது. இதனால்தான் உயிருக்கு பயந்து இருவரும் கோவையில் இருந்து கேரளாவுக்கு தப்பி வந்தார்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தற்போது போலீசார், பல்சர் சுனிலை கொல்வதற்கு கூலிப்படை ஏவியது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்சர் சுனிலை கைது செய்தால் நடிகையை கடத்த திட்டமிட்டது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி விடும் என்ற அச்சத்தில், இதில் தொடர்புடையவர்கள் தான் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். நடிகை கடத்தப்பட்ட அன்று இரவில் பல்சர் சுனில் கொச்சி பொன்னுருன்னியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தது, வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது.

அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு குடும்பத்துடன் நடிகர் திலீப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வக்கீல் வாக்குமூலம்

பல்சர் சுனிலுக்காக முதலில் ஆஜரான வக்கீல் பிரதீஸ் சாக்கோ, தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி கூறி வருவது போலீசுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நடிகையை ஆபாச படம் எடுத்த செல்போனை ஒரு விஐபி மூலம் திலீப்பிடம் கொடுத்து அனுப்பியதாக கூறினார்.

பின்னர் அந்த செல்போனை தனது உதவியாளர் மூலம் சேதப்படுத்தி விட்டதாக போலீசில் கூறினார். ஆனால் அதை போலீசார் நம்பவில்லை.

இதையடுத்து வக்கீலின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதால் அவரை கூடுதலாக விசாரிக்க அனுமதிக்கும்படி உயர்நீதிமன்றத்தை அணுக போலீசார் தீர்மானித்துள்ளனர்.

இதற்கிடையில், திலீப் ஜாமீன் ேகாரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். இந்த மனு கடந்த வியாழனன்று விசாரணைக்கு வந்தது.

2 மணி நேரம் வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் ேகட்ட நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் வரும் 24ம் தேதி ஜாமீன் மனுவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

.

மூலக்கதை