பல்லடத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ₹220 கோடியில் நலத்திட்ட உதவி முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்லடத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ₹220 கோடியில் நலத்திட்ட உதவி முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்

திருப்பூர்: பல்லடம் அருகே இன்று மாலை நடைபெறும் எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழாவில், ரூ. 220 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அரசு சார்பில் எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கிறார்.

வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம். ஜி. ஆரின் படத்தினை திறந்துவைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், ரூ. 207. 37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும்
வேளாண் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ. 13. 24 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், திருப்பூர் மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 21 ஆயிரத்து 99 பயனாளிகளுக்கு ரூ. 220 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார்.

.

மூலக்கதை