இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய சலுகை!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய சலுகை!

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற பயணம் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகைக்கு தகுதிபெற்றுள்ள நாடுகளுக்காக இந்த வரிச் சலுகை வழங்கப்படுகின்றது.
 
இந்த நிலையில், இலங்கையும் அதனூடாக நன்மை பெறவுள்ளது.
 
இதற்கமைய, பயணப் பைகள், தோட்பைகள் மற்றும் பணப்பை போன்ற பொருட்களுக்கு, முன்னர் அறவிடப்பட்ட 6 முதல் 20 சதவீதம் வரையான வரி, தற்போது நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை