தோல் – காலணி துறைக்கு ரூ.2,600 கோடி ஊக்க சலுகை திட்டம்

தினமலர்  தினமலர்
தோல் – காலணி துறைக்கு ரூ.2,600 கோடி ஊக்க சலுகை திட்டம்

புது­டில்லி:மத்­திய அரசு, தோல் மற்­றும் காலணி துறை­யின் ஏற்­று­ம­தியை அதி­க­ரித்து, வேலை­வாய்ப்பை பெருக்க, 2,600 கோடி ரூபாய் மதிப்­பி­லான, ஊக்­கச்­ச­லுகை திட்­டத்தை, விரை­வில் அறி­விக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, ஜவுளி மற்­றும் ஆயத்த ஆடை­கள் துறைக்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான,ஊக்­கச்­ச­லுகை திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. அது போல, தோல் மற்­றும் காலணி துறை­யின் வளர்ச்­சிக்கு, 2,600 கோடி ரூபாய் மதிப்­பி­லான திட்­டத்தை, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் தயா­ரித்­துள்­ளது. இத்­திட்­டத்­திற்கு, நிதிச் செல­வின குழு, ஏற்­க­னவே ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.
இதை­ய­டுத்து, திட்ட வரைவு அறிக்கை, அனைத்து அமைச்­ச­கங்­களின் கருத்து கேட்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு உள்­ளது.விரை­வில், இத்­திட்­டம் குறித்த அறி­விப்பு வெளி­யா­கும். இத்­திட்­டத்­தின் கீழ், தோல், தோல் பொருட்­கள், கால­ணி­கள் உள்­ளிட்ட துறை­க­ளுக்கு, வரி மற்­றும்அது சாரா சலு­கை­கள் கிடைக்­கும்.தற்­போது, தோல் மற்­றும் காலணி துறை­யில், 30 லட்­சம் பேர் வேலை செய்­கின்­ற­னர். இத்­து­றை­யில், 1 கோடி ரூபாய் முத­லீடு செய்­தால், 250 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
எனவே, ஊக்­கச்­ச­லுகை திட்­டம் மூலம், தோல் மற்­றும் காலணி தயா­ரிப்பு துறை­யில் வேலை­வாய்ப்பு பெரு­கும். அத்­து­டன், ஏற்­று­ம­தி­யில், சீனா­வின் கடு­மை­யான போட்­டியை சமா­ளிக்க முடி­யும் என, மத்­திய அரசு கரு­து­கிறது.தற்­போது, இத்­து­றை­யின் ஏற்­று­மதி, 700 கோடி டால­ராக உள்­ளது. இதை, 2020ல், 1,500 கோடி டால­ராக உயர்த்த, அரசு இலக்கு நிர்­ண­யித்து உள்­ளது. இதற்கு, ஊக்­கச்­ச­லுகை திட்­டம் பெரி­தும் துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை