தேசிய காப்புரிமை வாரியம்இணைப்பு நடவடிக்கை தீவிரம்

தினமலர்  தினமலர்
தேசிய காப்புரிமை வாரியம்இணைப்பு நடவடிக்கை தீவிரம்

மும்பை:தேசிய காப்­பு­ரிமை, வடி­வ­மைப்பு மற்­றும் வர்த்­தக முத்­திரை அலு­வ­லக தலைமை அதி­காரி, ஓ.பி.குப்தா கூறி­ய­தா­வது:தேசிய காப்­பு­ரிமை வாரி­யத்தை, அறி­வு­சார் சொத்­து­ரிமை மேல்­மு­றை­யீட்டு வாரி­யத்­து­டன் இணைக்க, தீவிர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. இந்­தாண்டு இறு­திக்­குள், இரு அமைப்­பு­களும் இணைக்­கப்­பட்டு, செயல்­பட துவங்­கி­வி­டும். காப்­பு­ரிமை வாரி­யம் செயல்­பட துவங்­கி­ய­தும், நிலு­வை­யில் உள்ள அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும் தீர்வு காணப்­படும்.
புதிய அமைப்­பின் தலை­வரை தேர்ந்­தெ­டுப்­பது குறித்த பரி­சீ­லனை நடை­பெ­று­கிறது.காப்­பு­ரிமை விண்­ணப்­பங்­கள் மீதான பரி­சீ­லனை முடி­வ­டைந்து, மூன்று மாதங்­க­ளுக்­குள் ஒப்­பு­தல் வழங்­கப்­ப­டு­கிறது. இதை, மேலும் குறைப்­ப­தற்­கான வழி­வ­கை­கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்றன.நாடு முழு­வ­தும், அறி­வு­சார் சொத்­து­ரிமை குறித்த விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­கள் நடத்த முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. குறிப்­பாக, இந்­தாண்டு, 200க்கும் அதி­க­மான பள்­ளி­கள், கல்­லுா­ரி­களில், அறி­வு­சார் சொத்­து­ரிமை விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­கள் நடத்த திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை