ஜியோ போனில் ‛ஜிலீர்' வசதிகள்

தினமலர்  தினமலர்
ஜியோ போனில் ‛ஜிலீர் வசதிகள்

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போனை இன்று அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த அந்நிறுவனத்தின் 70வது பொதுக்குழு கூட்டத்தில் இந்த போனை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

ஜியோ போன் சிறப்பம்சங்கம் :

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த போன் முழுக்க முழுக்க இந்தியர்களால் உருவாக்கப்பட்டது.

* ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்தியாவிற்கான இன்டலிஜென்ட் ஸ்மார்ட்போன், பார்வையில் சாதாரண கீ போர்டுகளை கொண்ட போனாக இருக்கும்.

* 4ஜி எல்டிஇ.,யான இந்த ஜியோ போன், 22 இந்திய மொழிகளை கொண்டது. மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டது.

* வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலம் இயக்கக் கூடியது. உதாரணமாக, போனை தொடாமலேயே ஒருவரின் பெயரை மட்டும் கூறி, அவர்களை அழைக்க வேண்டும் என்ற கூறினால், அவர்களுக்கு கால் செய்யப்படும்.

* ஜியோ போனில் மியூசிக், சினிமா உள்ளிட்ட ஆப்ஸ்கள் ஏற்கனவே லோட் செய்யப்பட்டிருக்கும். இந்த ஆப்ஸ்களையும் வாய்ஸ் மூலம் இயக்க முடியும். உங்களுக்கு தேவையான தகவல் எதுவாயினும் அதனை நீங்கள் கேட்டால், அந்த தகவல் தரப்படும்.

* நீங்கள் எந்த மொழியில் வாய்ஸ் கமெண்ட் கொடுக்கிறீர்களோ அதை புரிந்து கொண்டு, அந்த மொழியிலேயே பதில் அல்லது பாடல் வழங்கப்படும்.

* இந்த போனில் உள்ள 5 என்ற எண்ணை நீண்ட நேரம் அழுத்தினால், போனில் இருந்து தானாக உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு நீங்கள் அவசர காலத்தில் இருப்பதற்கான மெசேஜ் செல்லும். மெசேஜூடன் நீங்கள் இருக்கும் இடமும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். விரைவில் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மற்ற அவசர தேவைகளுக்கான அழைப்பு வசதிகளும் கொண்டு வரப்பட உள்ளது.

* இந்த போனில் பிரதமரின் நமோ ஆப்ஸ் ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளதால் பிரதமரின் மன் கி பாத் உள்ளிட்ட ரேடியோ நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

* இந்த ஆண்டு இறுதியில் அப்கிரேட் செய்யப்படும் இந்த போன் மூலம், உங்களின் அனைத்து கட்டணங்களையும் இதன் மூலமே எளிமையாக செலுத்தலாம்.

* ஜியோ போனில் வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம்.

* ஸ்மா்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் டிஜிட்டல் சுதந்திரத்தை அளிக்க உள்ள இந்த போன் ஆகஸ்ட் 15 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 முதல் துவங்க உள்ளது. இலவசமாக ஜியோபோனை முன்பதிவு செய்யலாம்.

* ஜியோபோன் பயன்படுத்துவோர் அன்லிமிடெட் டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், மெசேஜ்களை மாதத்திற்கு ரூ.153 என்ற கட்டணத்தில் பெறலாம்.

* ஜியோபோன்களை எந்த டிவி.,யுடன் இணைத்து அனைத்து டிவி சேனல்களையும் மாதம் ரூ.309 என்ற கட்டணத்தில் பார்க்கலாம்.

* ஜியோபோன்களை டிவி.,யுடன் இணைத்து போனிற்கு வரும் தகவல்களையும் டிவி.,யிலேயே பார்க்கலாம்.

* மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் பேக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.24 விலையில் 2 நாட்களுக்கு இலவச அன்லிமிடெட் டேட்டா உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெறலாம். ரூ.54 க்கு ஒரு வாரத்திற்கு இந்த சலுகைகளை பெறலாம்.

* ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் ரூ.1500 டெபாசிட் செய்து இந்த போனை பெற்று, 3 ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்கு பின் இந்த போனை நீங்கள் திருப்பிக் கொடுத்தால், டெபாசிட் தொகை திரும்ப தரப்படும். அதாவது, 3 ஆண்டுகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் டேட்டா, கால்களுக்கு மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதும். போன் முற்றிலும் இலவசம்.

* ஜியோ போன் பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.153 கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள், மெசேஜ்கள் வழங்கப்படும்.

* தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 125 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு விநாடிக்கும் 7 பேர் ஜியோ சேவைக்கு மாறிக் கொண்டுள்ளனர்.

மூலக்கதை