இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.35

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.35

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றமான போக்கிற்கு திரும்பி உள்ளதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததும் ரூபாய் மதிப்பு உயர்விற்கு காரணம் என கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 21, காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 64.35 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 64.43 ஆக இருந்தது.

மூலக்கதை