2016ம் ஆண்டில் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
2016ம் ஆண்டில் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

புதுடெல்லி : கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.   நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம் நடந்தது.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங் கூறியது: தேசிய குற்ற ஆவண பதிவேடுகள் துறை அளித்துள்ள தகவலின் படி கடந்த 2016ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 11 ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது முந்தைய 2015 ஆண்டைக் காட்டிலும் ஒரு ஆயிரம் குறைவு.



கடந்த 2015ம் ஆண்டு 12 ஆயிரத்து 600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் வருமானம் பெருகினால் தான் தற்கொலை நிகழ்வுகள் குறையும்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு திட்டங்களுக்காக ரூ. 3560 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

பயிர் இழப்பீடாக ரூ. 3548 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை எனவும்,  தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பலன் பெறுகின்றன எனவும் எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்தார்.

இதில் எழும் பிரச்னைகளை தீர்க்க விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நம்பிக்ைக இல்லை என்றால் மாநில அரசுகள் சொந்தமாக காப்பீடு நிறுவனங்களை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை வழங்கினார். பஞ்சாப் மாநில அரசு ஏற்கனவே சொந்தமாக இன்சூரன்ஸ் நிறுவனம் ெதாடங்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

வேளாண் கடனுக்காக இந்த ஆண்டு ரூ.

10 லட்சம கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

.

மூலக்கதை