வானொலியில் பிரதமர் உரையாற்றும் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி வருமானம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வானொலியில் பிரதமர் உரையாற்றும் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி வருமானம்

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும், ‘மன்கிபாத்’ நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலிக்கு ரூ. 10 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று, பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார்.

‘மன்கிபாத்’ (மனதின் குரல்) என்ற இந்நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் வாயிலாக கல்வி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், ‘மன்கிபாத்’ நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலிக்கு ரூ. 10 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி பங்கேற்கும் ‘மன்கிபாத்’ மூலம், 2015-16ம் ஆண்டில் ரூ. 4. 78 கோடியும், 2016-17ம் ஆண்டில் 5. 19 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.

இந்நிகழ்ச்சி 18 மொழிகளில் ஒலிபரப்பாகி வருகிறது.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது’’ என்றார்.

.

மூலக்கதை