தீவிரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தான் : அமெரிக்கா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தான் : அமெரிக்கா தகவல்

வாஷிங்டன் : தீவிரவாதிகள் புகலிடமாக திகழும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உதவியுடன் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தீவிரவாதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனபோக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் மட்டுமின்றி பாகிஸ்தானுக்குள்ளேயே நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் லக்‌ஷர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் சுந்திரமாக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பு, பயிற்சி உள்ளிட்டவற்றில் தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், இதை தடுக்க பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் கண்டுகொள்வது கிடையாது என்றும், அவர்களுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான், சோமாலியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஈராக், லெபனான், லிபியா, ஏமன், கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகள் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை