தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி 27ல் மனித சங்கிலி போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி 27ல் மனித சங்கிலி போராட்டம்

சென்னை : தமிழகத்தில நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 27ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க. அன்பழகன் முன்னிலை வகித்தார்.

முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, வி. பி. துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட செயலாளர்கள் ஜெ. அன்பழகன், மா. சுப்பிரமணியம், பி. கே. சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், கி. வேணு, தா. மோ. அன்பரசன், சுந்தர், பிச்சாண்டி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா, பேரறிஞர் அண்ணா முதன் முதலில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைத்ததின் பொன்விழா, மதராஸ் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பொன்விழா- இவை எல்லாவற்றிற்கும் இனிய தொடச்சியாக நூற்றாண்டு விழா கண்ட திராவிட இயக்கத்தின் வரலாற்றில் 10. 8. 17 அன்று 75வது ஆண்டுகளை நிறைவு செய்து முரசொலி பவளவிழா கொண்டாடுகிறது. திராவிட இயக்கத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் ஏற்றமிகு, எழுச்சிமிகு ஏடாக, எதிர்பாளர்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கும் ஈட்டி முனையாத் திகழ்ந்து வரும் முரசொலியின் பவளவிழாவினை ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக முரசொலி அறக்கட்டளை சிறப்பாக கொண்டுவதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனடியாக வழங்க ே வண்டும் என்று வலியுறுத்தி வருகிற 27ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை அறவழியில் அமைதியான முறையில் நடத்துவது.

மாநிலம் சார்ந்த பிரச்னைகளை ஆணித்தரமாக சட்டமன்றத்தில் குரல் எழுப்பி ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்து ஜனநாயக கடமையினை நிறைவேற்றிடும் வகையில் நேர்த்தியான முறையில் செயல் ஆற்றிய எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக எம்எல்ஏக்களுக்கு பாராட்டுக்கள்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும். கதிராமங்கலம் மக்கள் மற்றும் பேராசிரியர் ஜெயராமன், சேலம் மாணவி வளர்மதி, மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரை உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


.

மூலக்கதை