ஆலங்குடி அருகே 34 கொத்தடிமைகள் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆலங்குடி அருகே 34 கொத்தடிமைகள் மீட்பு

புதுக்கோட்டை : விழுப்புரம் மாவட்டம், பானாப்பட்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வானூர், அண்டப்பட்டு, கூத்தாகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  34 பேரை தலா ரூ. 3 ஆயிரம் முன்பணம் கொடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கரும்பு வெட்ட ஆந்திராவிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு பணிகள் முடிந்தவுடன், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அழைத்து சென்று வேலை செய்ய வைத்துள்ளார்.

தற்போது புதுகை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கீழாத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக மாவட்ட விழிப்புணர்வு குழுவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று சப் கலெக்டர் ஜெயபாரதி, ஆலங்குடி தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கீழாத்தூர் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது புஷ்பராஜ் என்பவரது தோட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியாற்றுவது தெரிய வந்தது.   34 பேரையும் அதிகாரிகள் மீட்டனர். தொழிலாளர்களில் சில குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இருந்தனர். ஒரு வார கூலி தொகை ரூ. 40 ஆயிரம் சம்பந்தப்பட்டவர்களிடம் பெறப்பட்டு மீட்கப்பட்ட 34 பேருக்கும் வழங்கப்பட்டு நேற்றிரவு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

.

மூலக்கதை