நாகாலாந்தில் தொடரும் அரசியல் குழப்பம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் முதல்வர் ஓட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாகாலாந்தில் தொடரும் அரசியல் குழப்பம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் முதல்வர் ஓட்டம்

கோகிமா : நாகாலாந்தில் முதல்வருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நிலையில் முதல்வர் பங்கேற்கவில்லை. இதனால் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
நாகாலாந்தில் முதல்வர் லெய்சீட்சு தலைமையிலான நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களில் நாகா மக்கள் முன்னணிக்கு 47 பேர் உள்ளனர். சுயேட்சை உறுப்பினர்கள் 8 பேர், பாஜவுக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒரு இடம் காலியாக உள்ளது. இதற்கிடையில் முதல்வர் லெய்சீட்சுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெலியாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து ஜெலியாங்குக்கு ஆதரவாக 35 எம்எல்ஏக்களும், முதல்வர் லெய்சீட்சுக்கு 12 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஜெலியாங் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.



தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கவர்னர் ஆச்சார்யாவை சந்தித்து ஜெலியாங் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த 15ம் தேதிக்குள் தனது மெஜாரிட்டியை லெய்சீட்சு நிரூபிக்க வேண்டும் என ஏற்கனவே கவர்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.   ஆனால் கவர்னர் உத்தரவுக்கு தடை கோரி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கவுகாத்தி ஐகோர்ட் கிளையில் லெய்சீட்சு வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் லெய்சீட்சு இன்று தனது பெரும்பான்மையை சட்ட பேரவையில் நிரூபிக்க வேண்டும் என கவர்னர் ஆச்சார்யா உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையில் பாஜ எம்எல்ஏக்கள் 4 பேரும் ஜெலியாங்குக்கு ஆதரவு தெரிவித்து கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

கவர்னர் உத்தரவின் பேரில் காலை 9. 30 மணிக்கு நாகாலாந்து சட்ட பேரவை சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் கூட்டினார்.

இன்று முதல்வர் லெய்சீட்சு அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் சட்டபேரவைக்கு முதல்வர் லெய்சீட்சு வராமல் டிமிக்கி கொடுத்தார்.

இதனால் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சட்ட பேரவை காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக முதல்வராக இருந்த ஜெலியாங் பதவி விலக நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை