மாரி 2 தனுஷ், அனிருத் மீண்டும் இணைவார்களா?

PARIS TAMIL  PARIS TAMIL
மாரி 2 தனுஷ், அனிருத் மீண்டும் இணைவார்களா?

 பாலாஜி மோகன், அனிருத், தனுஷ் கூட்டணியில் 2015-ம் ஆண்டு வெளிவந்த மாரி படம் இசை ரீதியாக மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம். படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும், தீம் மியூசிக், பின்னணி இசை என தன்னுடைய திறமையை அதிகம் வெளிப்படுத்தியிருந்தார் அனிருத். இப்போது மாரி படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், கடந்த சில படங்களாக பிரிந்திருக்கும் அனிருத் - தனுஷ் கூட்டணி மீண்டும் மாரி 2 படத்தில் இணையுமா என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 
வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் அனிருத் இசை இல்லாதது பெரும் குறை என தனுஷ் ரசிகர்களே விமர்சித்துவிட்டார்கள். கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவில் கூட முதல் பாகத்தில் அனிருத் இசைத்த தீம் மியூசிக்கைத்தான் பயன்படுத்தியிருந்தார்கள். இதிலிருந்தே அனிருத்தின் இசை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 
மாரி மாதிரியான படத்திற்கு அனிருத்தின் அதிரடி இசை அவசியம் என்பது தனுஷுக்கும் தெரியாமலா இருக்கும். ஆனால், ஏதோ ஒரு ஈகோவால் அவர் அனிருத்துடன் மீண்டும் சேராமல் இருக்கிறார். அது மட்டுமல்ல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மியூசிக் ஜீனியஸ் என்று வேறு சொல்லி வருகிறார். மாரி 2 படத்தில் அனிருத் இசை இல்லை என்றால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.
 

மூலக்கதை