ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் அச்சம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் அச்சம்

வாஷிங்டன் : ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பம் மற்றும் அலாஸ்காவின் அலெயுடியன் தீவுகள் இடையே இன்று அதிகாலை 5. 04 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 8 ஆக இது பதிவானதாக, அமெரிக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால், கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது.

இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதன் அருகேயுள்ள இடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

.

மூலக்கதை