வெள்ளை மாளிகை தலைமை ெபாறுப்புக்கு இந்திய பெண் தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெள்ளை மாளிகை தலைமை ெபாறுப்புக்கு இந்திய பெண் தேர்வு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பு மிகவும் முக்கியமான பதவியாகும். அமெரிக்க அதிபர், குடும்பம் மற்றும் வெள்ளை மாளிகையின் அன்றாட நிகழ்வுகள் குறித்து பத்திரிகைகளுக்கு என்ன செய்தி கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பதவி இது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் பழைய பொறுப்புகளிலிருந்து ஒவ்வொருவராக விலகி வந்தனர். சிலர் நீக்கப்பட்டனர்.

தகவல் அலுவலகத்தின் தலைமை பொறுப்பு காலியாக இருந்தது. இதற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தனக்கு நெருக்கமானவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ், 44, நியமிக்க முடிவு செய்தார்.

இந்த பதவிக்கு வருபவர்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அவசியம்.

நியோமி ராவுக்கு செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் மொத்தமுள்ள 99 வாக்குகளில் 54 வாக்குகள் கிடைத்தன. அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், நியோமி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டால், வெள்ளை மாளிகை நிர்வாக விவகாரங்களை நியோமி கவனித்துக் கொள்வார்.

.

மூலக்கதை