பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் மகளிடம் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் மகளிடம் விசாரணை

இஸ்லாபாத்: பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள், நவாஷின் சகோதரர் ஆகியோரிடம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற விசாரணை குழு  நேற்று விசாரணை நடத்தியது. உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு முக்கியமான அரசியல் தலைவர்கள் ஊழல் செய்து போலியான நிறுவனங்கள் பெயரில்  சொத்து சேர்த்து வைத்துள்ளதாக ‘மோசக் பொன்சிகா’ என்ற சட்ட நிறுவனம் கூறியது.

அதற்கான ஆவணங்களாக தம்மிடம் 1. 15 கோடி பக்கங்கள் இருப்பதாக தெரிவித்தது. இது பனாமா பேப்பர்ஸ் என்கிற பெயரில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும்  பரபரப்பை உண்டாக்கியது.

இந்த ஊழலில் இந்தியாவை சேர்ந்த 500 முக்கியப் பிரமுகர்களின் பெயர்களும் இருப்பதாக அந்த நிறுவனம் கூறியது.
 
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.   இதனால் பாகிஸ்தான் நாட்டில் பிரச்னை வெடித்து.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு, உச்சநீதிமன்ற சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்தக்குழு நவாஷ் ஷெரீப் குடும்பத்தை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று விசாரணை குழு முன்பு  நவாஷ் மகள் மரியாம் ஷெரீப், அவரது கணவர் முகமது சப்தார், நவாஷ் சகோதரர் ஹீசை ஷரீப் ஆகியோர் ஆஜரானார்கள். இவர்களிடம் தனித் தனியாக 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது.

இந்த விசாரணையின் அறிக்கையை வரும் 10ம் தேதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது.

விசாரணையின் முடிவுகள் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பிற்கு எதிராக அமைந்தால் அவர் பதவி விலக நேரிடும்.

.

மூலக்கதை