மெர்சலில் ஜிவி பிரகாஷ்

தினமலர்  தினமலர்
மெர்சலில் ஜிவி பிரகாஷ்

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மெர்சல் படத்திற்காக ஏற்கனவே நான்கு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ரஹ்மான். தற்போது, 5-வது பாடலை உருவாகியுள்ள ரஹ்மான், அந்தப்பாடலை தனது மருமகனும், நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை கொண்டு பாட வைத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் முதன்முதலில் பாடியது ரஹ்மானின், "ஜென்டில்மேன்" படத்தில் இடம்பெற்ற "ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு ரயில்..." பாடலில் தான். அதன்பிறகு மே மாதம், பம்பாய், உள்ளிட்ட சில படங்களில் பாடியிருப்பவர், "வெயில்" படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறி, தற்போது நடிகராகவும் வளர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் மாமா இசையில் பாடியிருக்கிறார் ஜிவி.

மூலக்கதை