லியூ சியாபோக்கு 'பரோல்'

தினமலர்  தினமலர்
லியூ சியாபோக்கு பரோல்

பீஜிங்: சீன சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நோபல் பரிசு பெற்ற, மனித உரிமை ஆர்வலர் லியூ சியாபோ, 61,க்கு, நேற்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான, 'பரோல்' கிடைத்தது.
சீனாவில், மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரும், மிகச் சிறந்த அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான, லியூ சியாபோ, 2009ல், அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். லியூ சியாபோவின் மனித உரிமைகளுக்கு ஆதரவான செயல்பாடு மற்றும் பிரசாரத்தை பாராட்டி, 2010ல், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சியாபோ, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
புற்றுநோய் சிகிச்சைக்காக, சியாபோக்கு, நேற்று பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ளார். மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த, சியாபோக்கு பரோல் கிடைத்துள்ள தகவலால், அவரது
ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை