டிரம்ப்பின் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி

தினமலர்  தினமலர்
டிரம்ப்பின் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி

வாஷிங்டன்: குறிப்பிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை, பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு
உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு, 90 நாட்களும், மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நுழைவதற்கு, 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு ஐகோர்ட்கள் உத்தரவை செயல்படுத்துவதற்கு தடை விதித்தன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் அல்லது அமெரிக்க நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் தவிர மற்றவர்களுக்கு, அரசின் தடை உத்தரவு பொருந்தும்' என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம்கோர்ட் அக்டோபரில் வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளது.

மூலக்கதை