கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நிலை என்ன?

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நிலை என்ன?

கட்டாரில் நிலவும் தற்போதைய நிலைமை காரணமாக எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை தெரிவித்தார். 
 
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்.
 
“கட்டாரிலுள்ள இலங்கையரின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. வர்த்தக ரீதியில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் தூதுவர்களுக்கான விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறுவுள்ளது. இதற்காக அனைத்து தூதுவர்களும் அழைக்கப்படவுள்ளனர்”.. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, கட்டாருடனான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை முன்வைத்ததுடன், அதற்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
 
இந்த காலக்கட்டத்தில் இலங்கையர்கள் குறித்து தகவல் கேட்டபோதே அமைச்சர் குறித்த கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை