வீட்டு பாடமாக தற்கொலை கடிதம்

தினமலர்  தினமலர்
வீட்டு பாடமாக தற்கொலை கடிதம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்னது, பெற்றோரை கோபப்படுத்தி உள்ளது. இதற்காக பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பெற்றோர் ஆவேசம்

லண்டன் நகரில் கிட்பிரோக்கி என்ற இடத்தில் தாமஸ் டாலிஸ் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் டீன்ஏஜ் வயதுடைய மாணவர்கள், 60 பேருக்கு அவர்களின் ஆங்கில ஆசிரியர், வீட்டு பாடமாக தற்கொலை கடிதத்தை எழுதி வரும்படி கூறியுள்ளார். பிரபல எழுத்தாளர் ேஷக்ஸ்பியர் எழுதிய, 'மெக்பத்' கதையில் வரும் உருக்கமான தற்கொலை கடிதம் போல் இருக்க வேண்டும் எனவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.
இது பெற்றோருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரு மாணவியின் தாய் கூறுகையில், ' என் மகளின் தோழிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற வீட்டு பாடம் என் மகளுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது' என்றார். இது குறித்து பள்ளி முதல்வர் கரோலின் ராபர்ட்ஸ் கூறுகையில், '' சம்பந்தப்பட்ட பெற்றோரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளோம்,'' என்றார்.



மூலக்கதை