வீதியோரங்களில் விழிப்புணர்வு விளம்பரமாக மாற்றமடைந்த பும்ராவின் "நோ போல்"!

PARIS TAMIL  PARIS TAMIL
வீதியோரங்களில் விழிப்புணர்வு விளம்பரமாக மாற்றமடைந்த பும்ராவின் நோ போல்!

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக சம்பியன் கிண்ணத்தினை வென்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்ஹர் சமான் 3 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில் விக்கட்காப்பாளர் டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
 
ஆனால் பும்ரா வீசிய அந்த பந்து, நோ-போலாக வீசியது தெரிய வந்ததால் மறுவாழ்வு பெற்ற பக்ஹர் சமான் அதன் பிறகு தனது கன்னிச்சதம் அடித்து (114 ஓட்டங்கள்) பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
 
இந்த நிகழ்வு நடைபெற்று ஒரு வாரம் கூட கடக்காத நிலையில் பும்ரா வீசிய நோ போலின் படத்தை இந்தியா – ஜெய்பூரில் உள்ள போக்குவரத்து பொலிஸார் வித்தியாசமாக போக்குவரத்து விதிமுறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறர்கள்.
 
அதாவது இரண்டு கார்கள் ஒரு பக்கத்தில் சாலையில், சிக்னல் எல்லைக்கோட்டுக்கு பின்னால் நிற்கிறது. இன்னொரு பகுதியில் பும்ரா நோ-போலாக வீசும் காட்சி இடம் பெற்று இருக்கிறது. அதற்கு கீழ் வாகன சாரதிகளை எச்சரிக்கும் வகையில் ”வீதி விதிக்குரிய எல்லையை கடக்காதீர். மீறினால் அதிக விலையை கொடுக்க வேண்டியது வரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த புகைப்படத்தால் கோபமடைந்த பும்ரா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெல்டன் ஜெய்ப்பூர் போக்குவரத்து பொலிஸ் நாட்டுக்காக நாம் செய்யும் சாதனைக்கு கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும், கவலைப்படாதீங்க ஜெய்ப்பூர் பொலிஸ் நீங்க தப்பு செஞ்சுட்டீங்கன்னு சொல்ல மாட்டேன். தவறு செய்வது மனித இயல்பு என்றும் நக்கலடித்துள்ளார்.
 
பும்ராவின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ள ஜெய்ப்பூர் பொலிஸ் இதற்காக மன்னிப்புகேட்டுள்ளது. அதேசமயம், வேண்டும் என்றே இதைச் செய்யவில்லை என்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வுக்காகவே இதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த புகைப்படம் அங்கு பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம்.

மூலக்கதை