சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை

தினமலர்  தினமலர்
சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை

நடுத்­தர மற்றும் சிறு­தொழில் நிறு­வ­னங்கள் ரொக்­க­மில்லா பரி­வர்த்­த­னைக்கு மாறும் வகையில் முயற்­சி­களை மேற்­கொள்­வது பல­ன­ளிக்கும் என, போஸ்டன் கன்­சல்­டிங் குரூப் அறிக்கை தெரி­விக்­கி­றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை அறி­விக்­கப்­பட்டு, அதைத் தொடர்ந்து ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை ஊக்­கு­விக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லையில் போஸ்டன் கன்­சல்டிங் குரூப், 1,700க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்கள் மத்­தியில், ஆய்வு நடத்தி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. துவக்­கத்­தை­விட முதல் ஆறு மாதங்­க­ளுக்குள், 22 சத­வீத நிறு­வ­னங்கள், ‘டிஜிட்டல்’ பரி­வர்த்­தனை முறையை சாத­க­மாக கரு­து­வ­தாக அறிக்கை தெரி­விக்­கி­றது. எனினும் நடுத்­தர மற்றும் சிறு தொழில் நிறு­வ­னங்­களில், 50 சத­வீ­தத்­திற்கும் மேல் ரொக்க பரி­வர்த்­த­னைக்கு திரும்­பு­வதை விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ளன.

எனவே, நடுத்­தர மற்றும் சிறு­தொழில் நிறு­வ­னங்கள் ரொக்­க­மில்லா பரி­வர்த்­த­னைக்கு மாறு­வதை ஊக்­கு­விக்கும் முயற்­சிகள், ‘டிஜிட்டல் இந்­தியா’ திட்­டத்­திற்கு அதிகம் பய­ன­ளிக்கும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. லாபம் பாதிக்­கப்­படும் எனும் அச்சம், போதிய விழிப்­பு­ணர்வு இல்­லா­தது உள்­ளிட்ட அம்­சங்கள், சிறு­தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு தடை­யாக இருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.

மூலக்கதை