தங்கம் விலை வீழ்ச்சி: வெள்ளி விலை உயர்வு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: கடந்த இரு தினங்களாக விலை உயர்வை கண்டு வந்த தங்கம் விலை, நேற்று வீழ்ச்சியடைந்தது. அதே சமயத்தில் வெள்ளியின் விலை ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.39,000 என்ற அளவில் விற்பனையானது. டெல்லியில் நேற்று தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டது. சுத்த தங்கத்தின் விலையில் ரூ.5 வீழ்ச்சியடைந்தது 10 கிராம் கொண்ட தங்கம் ரூ.29,100 என்கிற அளவில் விற்பனையானது. 8 கிராம் கொண்ட ஆபரண தங்கத்தை பொறுத்தவரை விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முந்தைய விலையில் நீடித்தது. இதையடுத்து, 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.24,400 என்ற விலையில் விற்பனையானது. அதேசமயத்தில் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 உயர்ந்து ரூ.39,000 என்ற அளவில் விற்பனையானது. வெள்ளி நாணயங்களை பொறுத்தவரை, ரூ1000 உயர்ந்து 100 நாணயங்களின் வாங்கும் விலை ரூ.72,000 ஆகவும், விற்பனை விலை ரூ.73,000 ஆகவும் இருந்தது.

மூலக்கதை