சாலை விழிப்புணர்வு விளம்பரத்தில் பும்ரா ‛நோபால்'

தினமலர்  தினமலர்
சாலை விழிப்புணர்வு விளம்பரத்தில் பும்ரா ‛நோபால்

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பும்ரா நோபால் விசியதை, சாலை விழிப்புணர்வு விளம்பரத்திற்கு ஜெய்பூர் போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடனான பைனலில் முக்கிய தருணத்தில் இந்திய வீரர் பும்ரா நோபால் வீசினார். இதனால் 4 ரன்களில் அவுட்டாகி இருக்க வேண்டிய பாக்., துவக்க வீரர் ஜமான், நோபால் கண்டத்திலிருந்து தப்பி அதிரடி சதம் விளாசினார். இதனால் இமாலய இலக்கை குவித்த பாக்., எளிதில் வெற்றி பெற்றது. பும்ரா நோபால் வீசாமல் போயிருந்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கும்.

இந்நிலையில் பும்ரா நோபால் வீசியதை, சாலை விழிப்புணர்வு விளம்பரத்திற்கு ஜெய்பூர் போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ‛கோட்டைக் கடக்காதீர். அதற்கான கொடுக்கும் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும்' என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். இது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

மூலக்கதை