போராட்டத்தில் குதிக்கும் போலீஸ்; உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
போராட்டத்தில் குதிக்கும் போலீஸ்; உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

'உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி' முறையை ஒழிக்க வேண்டும்' என, போலீசார் சார்பாக போராட்டம் அறிவித்து இருப்பது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், போலீசார், தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். தற்போது, சென்னையின் பல பகுதிகளில், 'போஸ்டர்' ஒட்டி, ஜூலை 6ல், குடும்பத்துடன், தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

கோரிக்கைகள் என்ன


* பிற அரசு ஊழியர்களுக்கும், ஆண்டு முழுவதும், 24 மணி நேரம் பணிபுரியும் போலீசாருக்கும் இடையே உள்ள ஊதிய வேறுபாட்டை கலைய வேண்டும்
* போலீசாருக்கும், எட்டு மணி நேர பணி என, வரன்முறை செய்ய வேண்டும்
* பிற அரசு ஊழியர்கள் போல், வார விடுமுறை இல்லாததால், போலீசாருக்கு, ஒரு நாள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட, சுழற்சி முறையில் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும்
* வேலைப்பளு காரணமாக, போலீசார் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, போலீஸ் பற்றாக்குறை நீடிக்கையில், உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை பார்க்கும், ஆர்டர்லி முறையை அடியோடு ஒழிக்க வேண்டும்
* ஏழாவது ஊதியக்குழு தொடர்பான கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 6ல், தலைமைச் செயலகம் முன், குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை