அமெரிக்க புலனாய்வு அமைப்பு விமானங்களில் போதைப்பொருள் கடத்தல்

தினமலர்  தினமலர்

நியூயார்க்: விமானங்கள் மூலம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு போதைப்பொருள் கடத்தியதாக, முன்னாள் புலனாய்வு அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் விர்ஜினாவில் உள்ள மனாசஸ் பகுதியை சேர்ந்தவர் பிரங்ளின். இவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் தனது சுயசரிதையில் மத்திய புலனாய்வு துறையில் 1972 முதல் 1989 வரை பணியாற்றிய போது போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். பணிக்காலத்தில் 2000 டன் கோகேன் கடத்தியதாக தெரிவித்துள்ளார். ராணுவத்தின் 51 மையங்களில் அரசின் பறக்கும் வாகனங்களை பயன்படுத்தி கோகேன் மற்றும் கஞ்சா போன்ற பொருட்களை கடத்தியிருப்பதாக கூறியுள்ளார். இதற்காக வி இசட்-9 , வீ இசட்-13 விமானம் இதற்கு பயன்படுத்தப்பட்டது. போதைப்பொருளை மெக்சிகோவிலிருந்து நெவேடா வரை எடுத்து சென்றுள்ளதாக, தெரிவித்துள்ளார்.இது பற்றி சி.ஐ.ஏ. செய்தி தொடர்பாளர், அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மூலக்கதை