ஜி.எஸ்.டி., நடைமுறையில் கெடுபிடி இருக்குமா?

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., நடைமுறையில் கெடுபிடி இருக்குமா?

கோல்கட்டா : மத்­திய வர்த்­தக துறை செய­லர் ரீடா தியோ­தியா கூறி­ய­தா­வது: தற்­போ­தைய, பல முனை வரி­களில் வணி­கர்­கள் சந்­திக்­கும் சிக்­கல், வரி உயர்­வால் நுகர்­வோ­ருக்கு ஏற்­படும் பாதிப்பு போன்ற பிரச்­னை­கள் எது­வும், ஜி.எஸ்.டி.,யில் இருக்­காது.

நாடு முழு­வ­தும், ஒரே மாதி­ரி­யான வரி விதிப்பு இருக்­கும் என்­ப­தால், தற்­போது, வேறு மாநி­லங்­க­ளுக்கு சரக்­கு­களை அனுப்­பு­வ­தில், வர்த்­த­கர்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும். நுகர்­வோ­ருக்­கும் ஒரே சீரான விலை­யில் பொருட்­கள் கிடைக்­கும். எனி­னும், தற்­போ­தைய, ‘வாட்’ வரி நடை­மு­றை­யில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறும் போது, துவக்­கத்­தில் சில பிரச்­னை­கள் இருக்­கத்­தான் செய்­யும். அத­னால், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., நடை­மு­றை­யில் கணக்­கு­களை தாக்­கல் செய்ய, இரு மாதங்­கள் அவ­கா­சம் அளிக்­கப்­பட்டு உள்­ளது.

சுமு­க­மான முறை­யில், எளி­தாக புதிய வரி விதிப்­புக்கு மாறு­வ­தையே, அரசு விரும்­பு­கிறது. அத­னால், துவக்க காலத்­தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் உள்­ளிட்­டவை தொடர்­பாக, கெடு­பிடி எது­வும் இருக்­காது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை