மந்தமான சூழலிலும் மகத்தான சாதனை; ரெப்கோ வங்கியின் நிதிநிலை அறிக்கை

தினமலர்  தினமலர்
மந்தமான சூழலிலும் மகத்தான சாதனை; ரெப்கோ வங்கியின் நிதிநிலை அறிக்கை

சென்னை : கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், ரெப்கோ வங்­கி­யின் மொத்த வர்த்­த­கம், 13,500 கோடி ரூபாயை தாண்டி உள்­ளது.

சென்­னையை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு செயல்­பட்டு வரும், பொதுத் துறை வங்­கி­யான, ரெப்கோ வங்கி, 2016 – 17ம் நிதி­யாண்­டுக்­கான நிதி நிலை அறிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: கடந்த நிதி­யாண்­டில், வங்­கி­யின் மொத்த வர்த்­த­கம், 13,500 கோடி ரூபாய் என்ற மைல்­கல்லை கடந்­துள்­ளது. மேலும், கடந்த நிதி­யாண்­டில் வங்­கி­யின் வைப்­பு­நிதி, 8,166 கோடி ரூபா­யா­க­வும், வழங்­கப்­பட்ட மொத்த கடன், 5,349 கோடி ரூபா­யா­க­வும் உள்­ளது. வங்­கி­யின் மொத்த வரு­மா­னம், 1,021 கோடி ரூபாய். நிகர லாப­மாக, 121 கோடி ரூபாய் ஈட்­டப்­பட்டு உள்­ளது. வங்­கி­யின் நிகர மதிப்பு, 642 கோடி ரூபாய்.

வாராக்­க­டனை பொறுத்­த­வரை, கடந்த நிதி­யாண்­டின் முடி­வில், வங்­கி­யின் மொத்த வாராக்­க­டன், 5.61 சத­வீ­த­மா­க­வும், நிகர வாராக்­க­டன், 1.16 சத­வீ­த­மா­க­வும் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

நிதி­நிலை குறித்து, ரெப்கோ வங்­கி­யின் செயல் இயக்­கு­னர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பொறுப்பு வகிக்­கும், ஆர்.எஸ்.இஸ­பெல்லா கூறு­கை­யில், ‘‘மந்­த­மான உலக பொரு­ளா­தார சூழல், சவா­லான உள்­நாட்டு பொரு­ளா­தார வளர்ச்சி ஆகி­யவை, வங்கி துறை­யின் செயல்­பாட்­டை­யும், லாப வளர்ச்­சி­யை­யும் மிக­வும் பாதித்த சூழ­லி­லும், ரெப்கோ வங்கி, தன் சிறப்­பான செயல்­பாட்டை பதிவு செய்­துள்­ளது,’’ என்­றார்.

மூலக்கதை