‘உள்நாட்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.20 லட்சம் கோடியை எட்டும்’

தினமலர்  தினமலர்
‘உள்நாட்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.20 லட்சம் கோடியை எட்டும்’

புதுடில்லி : ‘இந்­தி­யா­வில் மின்­னணு வர்த்­த­கம், இந்­தாண்டு டிசம்­ப­ருக்­குள், 2,20,330 கோடி ரூபாய் என்ற அளவை எட்­டும்’ என, ஆய்வு ஒன்­றில் தெரிய வந்­துள்­ளது.

இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல் காமர்ஸ்’ எனப்­படும், மின்­னணு வர்த்­த­கம் குறித்து, ஐ.எம்.ஏ.ஐ., மற்­றும் ஐ.எம்.ஆர்.பி., நிறு­வ­னங்­கள் ஆய்வு மேற்­கொண்டு, வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வின் மின்­னணு வர்த்­த­கம், ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 30 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2016ல், 1,68,891 கோடி ரூபாயை எட்­டி­யது. இது, இந்­தாண்டு, 30.4 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, டிசம்­ப­ரில், 2,20,330 கோடி ரூபா­யாக உய­ரும்.

மின்­னணு வர்த்­த­கத்­தில், பயண டிக்­கெட் பிரி­வின் பங்கு, 50 சத­வீ­த­மாக உள்­ளது. கடந்த ஆண்டு, இப்­பி­ரி­வின் வர்த்­த­கம், 95,198 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, இந்­தாண்டு, 24 சத­வீ­தம் உயர்ந்து, 1,18,598 கோடி ரூபா­யாக உய­ரும். இதே காலத்­தில், வலை­த­ளம் வாயி­லான சில்­லரை விற்­பனை, 59 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 59,876 கோடி ரூபா­யில் இருந்து, 94,964 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கும்.

டி.டி.எச்., தொலை­பேசி, மின்­சா­ரம் போன்ற வச­தி­க­ளுக்­காக, மின்­னணு முறை­யில் செலுத்­தும் பணம், 6,277 கோடி ரூபா­யில் இருந்து, 7,532 கோடி ரூபா­யாக உய­ரும்.திரைப்­பட டிக்­கெட் பதிவு, மளிகை சாமான் மற்­றும் உண­வுப் பொருட்­க­ளுக்­கான வலை­தள சேவை வர்த்­த­கம், இந்­தாண்டு, 4,587 கோடி ரூபாய் என்ற அளவை எட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை