கடனால் சொத்தை விற்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

தினமலர்  தினமலர்
கடனால் சொத்தை விற்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

புதுடில்லி : அனில் அம்­பா­னி­யின் ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னம், 45 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் சிக்கி உள்­ளது. இதை­ய­டுத்து, டில்லி மற்­றும் மும்­பை­யில் உள்ள, ரியல் எஸ்­டேட் சொத்­து­களை விற்­பனை செய்­வ­தில், இந்­நி­று­வ­னம் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.

இது தவிர, தொலை தொடர்பு கோபுர வர்த்­த­கப் பிரிவை, கன­டா­வின் புரூக்­பீல்டு இன்ப்­ராஸ்ட்­ரக்­சர் நிறு­வ­னத்­திற்கு, விற்­பனை செய்து, 11 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட உள்­ளது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூலம், பெரும்­பான்மை வங்­கிக் கடனை, வரும் செப்­டம்­ப­ருக்­குள் திரும்­பத் தர, ஆர்­காம் திட்­ட­மிட்டு உள்­ளது. சொத்து விற்­பனை தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் துவங்கி நடை­பெற்று வரு­வ­தாக, ஆர்­காம் தெரி­வித்து உள்­ளது.

அனில் அம்­பா­னி­யின் சகோ­த­ரர், முகேஷ் அம்­பா­னி­யின் ஆர்­ஜியோ நிறு­வ­னம், 2016 செப்­டம்­ப­ரில், மொபைல் போன் சேவையை துவக்கி, இல­வச அழைப்­பு­கள் மூலம், தொலை தொடர்பு துறை­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் கார­ண­மாக, ஆர்­காம், ஏர்­டெல் உள்­ளிட்ட அனைத்து மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­களும், கடந்த நிதி­யாண்­டின் நான்­காம் காலாண்­டில் இழப்பை சந்­தித்­துள்ளன.

மூலக்கதை